பெயருக்கு ஏற்றது போல படம் முழுக்க சண்டைக் காட்சிகள் நிறைத்து துளி அளவு கூட பார்வையாளர்களை சலிக்க விடாமல் Blast செய்திருக்கிறார் இயக்குனர்.
| 🎬 திரைப்படத் தகவல்கள் (Movie Details) | |
|---|---|
| திரைப்படம் (Movie Title) | Blast |
| இயக்குனர் (Director) | சுபாஷ் K.ராஜ் |
| நடிகர்கள் (Casts) | அர்ஜுன் சர்ஜா, அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், ஜான் கோக்கன், அர்ஜுன் சிதம்பரம், இளங்கோ |
| தயாரிப்பாளர் (Producer) | கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் அர்ச்சனா, கல்பாத்தி எஸ் சுரேஷ் கல்பாத்தி எஸ் கணேஷ் |
| தயாரிப்பு நிறுவனம் (Productions) | AGS Entertainment |
| மொழி (Language) | தமிழ் |
| பட வெளியீட்டு தேதி (Release Date) | மே 28, 2026 |
| நேரம் அளவு (Duration) | 2 மணி 23 நிமிடங்கள் (143 நிமிடங்கள்) |
| தணிக்கை சான்றிதழ் (Certification) | UA |
| இசையமைப்பாளர் (Music Director) | ரவி பஸ்ரூர் |
| ஒளிப்பதிவு (Cinematography) | அருண் ராதாகிருஷ்ணன் |
| தயாரிப்பு செலவு (Budget) | ₹ 18 கோடி (தோராயமாக) |
| பாக்ஸ் ஆபீஸ் வசூல் (Box Office) | ₹ 58.28+ கோடி (உலகளவில்) |
| வெற்றி நிலை (Hit Status) | BLOCKBUSTER |
முழுமையான திரை விமர்சனம் (Detailed Review)
படம் ஆரம்பித்தவுடன் நடிகர் அர்ஜுன் ஒரு உணவகத்தில் தன்னுடைய மகளுடன் உணவு அருந்திக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அந்த உணவகத்தில் ஏற்பட்ட சிறிய தகராறில் சம்பந்தமே இல்லாமல் நடிகர் அர்ஜுன் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஆதரவாக சண்டை செய்கிறார். அப்பொழுது அவரது சண்டைக் காட்சி திறமைகள் அவளது மகளுக்கும் தெரிய ஆரம்பிக்கிறது.
இந்தப் பிரச்சினைகளில் இருந்து தன்னுடைய மகளை எப்படி அர்ஜுன் காப்பாற்றினார்? அந்த கனிமவள கொள்ளையை எப்படி தடுத்தார்? அந்த மலைவாழ் மக்கள் கிராமம் எப்படி காப்பாற்றப்பட்டது என்பதுதான் மீதி கதை.
படம் முழுக்க சுவாரஸ்யமாக எந்த இடத்திலும் சிறிது சலிப்பு தட்டாமல் அருமையாக கொண்டு போய் இருக்கிறார் படத்தின் இயக்குனர்.
- விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பு.
- பின்னணி இசை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது.
- தற்காப்பு கலையான கராத்தே கலையை இந்த திரைப்படத்தில் முக்கியமாக பேசப்பட்டுள்ளதால் இந்த படத்திற்கு பிறகு நிறைய பேர் 'கராத்தே' 'சிலம்பம்' போன்ற தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.
- சண்டைக் காட்சிகள் மட்டுமே உள்ளதால் குழந்தைகளுக்கு இந்த கதை புரிய தாமதமாகும்.
- படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் குடும்பங்களால் பார்க்கக் கூடியது தான். ஆனால் பார்ப்பதற்கு கொஞ்சம் வன்முறை அதிகமாக இருப்பது போல தோன்றும்.
"முதல்வன் திரைப்படத்தில் தான் செய்த சாதனையை மீண்டும் பிளாஸ்ட் திரைப்படத்தில் அதை முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார் நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறந்த திரையரங்க அனுபவம், நிச்சயம் தவறாமல் அனைவரும் போய் பாருங்கள்!"

